search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லோபஸ் ஆப்ரதோர்"

    மெக்சிகோவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி வேட்பாளர் லோபஸ் ஆப்ரதோர் விரைவில் பதவியேற்க உள்ள நிலையில் பல்வேறு சிக்கன அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். #Mexico #LopezObrador
    மெக்சிகோ சிட்டி:

    வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அதிபர் பதவி, பாராளுமன்றம் மற்றும்  3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபராக உள்ள பெனா நெய்டோ சார்ந்துள்ள ஐஆர்பி கட்சி படுதோல்வியடைந்தது. 

    ஐஆர்பி கட்சியில் இருந்து பிரிந்து இடதுசாரி சித்தாந்தங்கள் கொண்ட தேசிய ரீஜெனரேசன் இயக்கம் தொடங்கிய லோபஸ் ஆப்ரதோர் 53 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

    கடந்த ஒரு நூற்றாண்டாக மெக்சிகோவை ஆண்டுள்ள இரு கட்சிகளை தோற்கடித்தவர் என்ற வரலாற்று சாதனையை லோபஸ் ஆப்ரதோர் படைத்துள்ளார்.

    விரைவில் அவர் அதிபராக பதவியேற்க உள்ள நிலையில், இப்போதே பல சிக்கன நடவடிக்கை அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் மெக்சிகோ அதிபருக்கு மாதம் ரூ.10 லட்சம் ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தான் அதிபராக பதவியேற்றதும் அதிபருக்கான ஊதியம் ரூ.4 லட்சமாக குறைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

    ஊழல், வறுமை, போதை மாபியா ஆகியவற்றை ஒழிப்பதே தனது முதல் இலக்கு என லோபஸ் ஆப்ரதோர் தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்திருந்தார் என்பது குறிபிப்பிடத்தக்கது.
    மெக்சிகோவில் அதிபர் பதவிக்கு நேற்று நடந்த தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லோபஸ் ஆப்ரதோர் 53 சதவிகித வாக்குகள் பெற்று வரலாற்று வெற்றி பெற்றுள்ளார். #MexicoElections #LopezObrador
    மெக்சிகோ சிட்டி:

    வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அதிபர் பதவி, பாராளுமன்றம் மற்றும்  3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபராக உள்ள பெனா நெய்டோ மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளதால், அவர் சார்ந்துள்ள ஐஆர்பி கட்சி தோல்வியை தழுவும் என கருத்து கணிப்புகள் முன்னரே வெளியாகின.

    அதேபோல, வாக்கு எண்ணிக்கையில் அந்த கட்சி பின் தங்கியது. ஐஆர்பி கட்சியில் இருந்து பிரிந்து இடதுசாரி சித்தாந்தங்கள் கொண்ட தேசிய ரீஜெனரேசன் இயக்கம் தொடங்கிய லோபஸ் ஆப்ரதோர் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதே போல தேர்தல் முடிவுகள் எதிரொலித்தன.

    53 சதவிகித வாக்குகள் பெற்று அவர் முதலிடம் பிடித்துள்ளார். மெக்சிகோவை கடந்த ஒரு நூற்றாண்டாக ஆண்டுள்ள இரு கட்சிகளை தோற்கடித்தவர் என்ற வரலாற்று சாதனையை லோபஸ் ஆப்ரதோர் படைத்துள்ளார். மற்றொரு முக்கிய கட்சியான தேசிய ஆக்‌ஷன் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரிகார்டோ அனாயா 23 சதவிகித வாக்குகளுடன் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

    ஊழல், வறுமை, போதை மாபியா ஆகியவற்றை ஒழிப்பதே தனது முதல் இலக்கு என லோபஸ் ஆப்ரதோர் தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்திருந்தார். அமெரிக்காவின் குடியேற்ற கொள்கையை கடுமையாக ஆப்ரதோர் விமர்சித்து வந்தாலும், இவரது வெற்றிக்கு டிரம்ப் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
    மெக்சிகோவில் ஆதிக்கம் செலுத்தி வரும் இரண்டு கட்சிகளை வீழ்த்தி அதிபர் நாற்காலியில் லோபஸ் ஆப்ரதோர் அமர்வாரா? என்ற எதிர்பார்ப்புடன் அதிபர் மற்றும் பாராளுமன்றத்துக்கான தேர்தல் தொடங்கியுள்ளது. #MexicoElections
    மெக்சிகோ சிட்டி:

    வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அதிபர் பதவி, பாராளுமன்றம் மற்றும்  3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கு இன்று தேர்தல் தொடங்கியுள்ளது. தற்போதைய அதிபராக உள்ள பெனா நெய்டோ மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளதால், அவர் சார்ந்துள்ள ஐஆர்பி கட்சி தோல்வியை தழுவும் என கருத்து கணிப்புகள் வெளியாகின.

    ஐஆர்பி கட்சியில் இருந்து பிரிந்து இடதுசாரி சித்தாந்தங்கள் கொண்ட தேசிய ரீஜெனரேசன் இயக்கம் தொடங்கிய லோபஸ் ஆப்ரதோர் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் ஆண்ட கட்சியான தேசிய ஆக்‌ஷன் கட்சியின் சார்பில் ரிகார்டோ அனாயா போட்டியிடுகிறார்.

    லோபஸ் ஆப்ரதோர் வெற்றி பெற்றால், மெக்சிகோவை கடந்த ஒரு நூற்றாண்டாக ஆண்டுள்ள இரு கட்சிகளை வெளியேற்றியவர் என்ற பெயரை பெறுவார். இன்று மாலை வாக்குப்பதிவு நிறைவான பின்னர் வாக்குகள் எண்ணும் பணி தொடங்க உள்ளது. 

    போதை மாபியா ஆதிக்கம் கொண்ட நாடான மெக்சிகோவில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் மூன்று முக்கிய அரசியல்வாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால், வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    ×